மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். இத்திட்டம் எந்தவித அரசாங்க அல்லது தனியார் நிறுவன உதவியின்றியும்,…